விஜய்யின் 'பைரவா'வில் நடிக்கவில்லை. பிரபல தயாரிப்பாளர் பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,September 14 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் 'தாரை' தப்பட்டை' வில்லனும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை ஆர்.கே.சுரேஷ் தற்போது மறுத்துள்ளார். இந்த படத்தில் நான் வில்லனாக நடித்து வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் ஆண்டனியின் 'சலீம்' முதல் சமீபத்தில் வெளியான 'தர்மதுரை' வரை சுமார் 40 படங்களை வெளியிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ் தற்போது 'தனிமுகம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படத்தின் கதை தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் என நம்புவதால் ஹீரோவாக நடிப்பதாகவும், இந்த படத்தை ஷாஜி கைலாஷின் உதவியாளர் சாஜி இயக்குவதாகவும் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
'தனிமுகம்' தவிர உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும், சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருவதாகவும் ஆர்.கே.சுரேஷ் மேலும் கூறியுள்ளார்.

More News

மீண்டும் இணையும் 'நானும் ரெளடிதான்' டீம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரெளடி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர்...

சூர்யா-35 படத்தில் இணைந்த பிரபல நடிகை

சூர்யா நடித்து வரும் 'S 3' படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

வித்தியாசமான வில்லனாக மாறிய 'ஜோக்கர்' நடிகர்

சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்...

தனது எதிர்ப்பாளர்களுக்கு சிம்புவின் புத்திசாலித்தனமான அட்டாக்

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக...

காவிரி பிரச்சனை குறித்து விஜய்சேதுபதியின் உணர்ச்சிகரமான கருத்து

காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய சென்சிட்டிவ் பிரச்சனையாக உருவாகியுள்ள நிலையில் கோலிவுட் நட்சத்திரங்கள்...