ஆர்.கே.சுரேஷின் அடுத்த பட டைட்டில், இயக்குனர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,March 12 2018]
நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் கமல்ஹாசனின் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். ஏற்கனவே அவர் ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'டைசன்'. இந்த படத்தை அவரது ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை ரத்தன்லிங்கா இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'அட்டு' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிகர் அஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.