'தென்மாவட்டம்' இசையமைப்பாளர் சர்ச்சை.. ஆர்கே சுரேஷின் புதிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள ’தென்மாவட்டம்’ என்ற திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போஸ்டர் வெளியானது. ஆனால் அந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த யுவன் சங்கர் ராஜா, இந்த படத்துக்கு தான் இசையமைக்கவில்லை என்றும் இதுவரை என்னிடம் யாரும் இசையமைக்க அணுகவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு அடுத்த நாள் ஆர்கே சுரேஷ், ’யுவன் சங்கர் ராஜா நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளீர்கள், தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தானா? அல்லது வேறு யாராவது இசையமைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ஆர்கே சுரேஷ் அல்லது சமூக வலைதளத்தில் ’தென்மாவட்டம்’ திரைப்படத்தில் புதிய இசையமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறியதோடு இந்த பதிவில் யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தள ஐடியையும் டேக் செய்துள்ளார்.

இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா, ’தென்மாவட்டம்’ படத்தில் இசையமைக்க வில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆர்கே சுரேஷ் கூறியிருந்தாரே, அது குறித்த ஆதாரங்களை அவர் வெளியிடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.