சீரியல் நடிகையுடன் நிச்சயம், வேறொரு பெண்ணுடன் திருமணம்: ஆர்கே சுரேஷ் டுவிட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருபவர் ஆர்கே சுரேஷ். இவர் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பதும் சமீபத்தில் இவர் பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆர்கே சுரேஷ்க்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘எனக்கு இன்று திருமணம் நல்லபடியாக நடந்தது. இந்த சந்தோஷமான தருணத்தை உங்கள் அனைவரிடமும் நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. அதே நேரத்தில் என்னுடைய தனிப்பட்ட உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்கே சுரேஷ் தொலைக்காட்சி சீரியல் நடிகை திவ்யா என்பவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்தார் என்பதும், அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண நிச்சயதார்த்தம் முறிவடைந்து இருவரும் திருமணம் செய்ய வேண்டாமென பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Happy to share my joyous moment with you all! Yes, I tied the knot! Thank you so much for your love, blessings & support! Request everyone to please respect my privacy! pic.twitter.com/fRDstmBwqm
— RK SURESH (@studio9_suresh) October 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout