உங்க புரட்சி, புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? ஆர்கே சுரேஷின் 'காடுவெட்டி' டீசர்

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்த ’விசித்திரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’காடுவெட்டி’ என்ற படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’கையில் அரிவாளுடன் இருக்குற எங்ககிட்ட வச்சு கிட்டா, அரிவாளைத்தான் எடுப்போம் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தற்போது நடக்கும் முக்கிய சமூகப் பிரச்சனை ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? என்ற வசனத்துடன் இந்த டீசர் முடிவடைந்ததை அடுத்து, அது எந்த சமூகப் பிரச்சனை என்பதை இந்த டீசரை பார்க்கும்போது யூகிக்க முடிகிறது.

ஆர்கே சுரேஷ் ,சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார். ’வணக்கம் தமிழ்’ சாதிக் இசையில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் புகழேந்தி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

More News

முதல் நாளே 'விக்ரம்' சக்சஸ் மீட்: கமலுக்கு நேரில் வாழ்த்து சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

'ஏகே 61': அஜித்தின் கேரக்டரை கசியவிட்ட ஸ்டண்ட்மேன்!

தல அஜித் நடித்து வரும் 61வது திரைப்படமான 'ஏகே 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்று

சமந்தாவின் லேட்நைட் டேட்டிங்: யாருடன் தெரியுமா?

நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் லேட் நைட் டேட்டிங் செல்வதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் கருத்துக்கு 14 வருடங்கள் கழித்து பதில் சொன்ன படக்குழு!

 உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ஒரு கருத்துக்கு தற்போது படக்குழுவினர் பதில் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

பிக்பாஸ் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவது இந்த பிரபல நடிகையா?

தமிழ் உள்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.