ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மறந்துவிட்டீர்களா? யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர் கே சுரேஷ் தயாரித்து நடித்து இயக்கும் ’தென் மாவட்டம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த போஸ்டர் வந்த சில மணி நேரத்தில் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் ’ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் சொல்லும் விளக்கம் என்னவென்றால், ‘தென் மாவட்டம்’ என்ற இந்த படத்தில் நான் இசையமைக்க ஒப்புக்கொள்ளவில்லை, மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் அணுகவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் எப்படி போஸ்டரில் பெயர் போடலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவுக்கு ஆர்கே சுரேஷ் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் ’யுவன் சங்கர் ராஜா அவர்களே, நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி கையெழுத்திட்டுள்ளீர்கள், தயவு செய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்’ என்று கூறியுள்ளார்.
ஒப்பந்தம் போடாமலே ஒப்பந்தம் போடப்பட்டதாக ஆர்கே சுரேஷ் கூறுகிறாரா? அல்லது ஒப்பந்தம் போட்டதை யுவன் சங்கர் ராஜா மறந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆர்கே சுரேஷின் இந்த பதிவுக்கு யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இதில் உண்மை என்ன என்பது தெரியவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Hi Yuvan sir u have signed for movie and live in concert . Kindly check the agreement Thanku @thisisysr sir. https://t.co/8QEwmI5Jro
— RK SURESH (@studio9_suresh) March 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments