ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை மறந்துவிட்டீர்களா? யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!

  • IndiaGlitz, [Tuesday,March 05 2024]

ஆர் கே சுரேஷ் தயாரித்து நடித்து இயக்கும் ’தென் மாவட்டம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த போஸ்டர் வந்த சில மணி நேரத்தில் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் ’ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் சொல்லும் விளக்கம் என்னவென்றால், ‘தென் மாவட்டம்’ என்ற இந்த படத்தில் நான் இசையமைக்க ஒப்புக்கொள்ளவில்லை, மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் அணுகவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் எப்படி போஸ்டரில் பெயர் போடலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவுக்கு ஆர்கே சுரேஷ் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் ’யுவன் சங்கர் ராஜா அவர்களே, நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி கையெழுத்திட்டுள்ளீர்கள், தயவு செய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும்’ என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தம் போடாமலே ஒப்பந்தம் போடப்பட்டதாக ஆர்கே சுரேஷ் கூறுகிறாரா? அல்லது ஒப்பந்தம் போட்டதை யுவன் சங்கர் ராஜா மறந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆர்கே சுரேஷின் இந்த பதிவுக்கு யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இதில் உண்மை என்ன என்பது தெரியவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

பாம்பாட்டி சித்தர் ரகசியம்? எதிரிகளை விரட்டும் முருகன் மந்திரம்? - ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்களுடன் ஆன்மீக Glitz (பாகம் 2)

ஆன்மீக Glitz சேனலின் இரண்டாம் பாகத்தில், பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் பாம்பாட்டி சித்தர் மற்றும் அவரது ரகசியங்கள், போன்ற தலைப்புகளை ஆழமாகக் கலந்தாய்வு செய்கின்றனர்.

புல்லாங்குழல் இசை கேட்டதும் விக்கியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நயன்.. வைரல் வீடியோ..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் புல்லாங்குழல் கலைஞர் ஒருவர் வாசிக்க அதைக் கேட்டு நயன்தாரா தன்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள

'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் விஜயகாந்த் பட நடிகை.. புகைப்படங்களை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்..!

விஜயகாந்த், சுந்தர் சி, ஜீவன் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை 'சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நட்பின் அடிப்படையில் படுக்கையறை வரை சென்ற நடிகை.. இப்போது சிறையில் கம்பி எண்ணும் சோகம்..!

சினிமா நடிகை ஒருவர் நட்பின் அடிப்படையில் தனது தோழி ஒருவரின் படுக்கையறை வரை சென்ற நிலையில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வேட்டையன்' படப்பிடிப்பில் முதல் நாள்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக