புதிய சாதனைக்காக காத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ்-வரலட்சுமி படம்
Friday, May 19, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆர்.கே.சுரேஷ், மற்றும் நாயகியாக நடித்திருந்த வரலட்சுமி ஆகியோர் இணைந்து நாயகன் - நாயகியாக நடிக்கவுள்ள திரைப்படம் 'வர்கம்'. 'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராக இருந்த இந்திரஜித் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து நாயகி வரலட்சுமி கூறியபோது, 'இது ஒரு கிராமிய கதை. இந்த படத்தில் நான் கிராமத்து பெண்ணாக நடிக்கவுள்ளேன். நாங்கள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே நாளில் முடிக்க திட்டமிட்டுளோம். அதற்காக கடந்த 15 தினங்களுக்கும் மேலாக இந்த படத்திற்காக ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே நாளில் முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை ஒரே நாளில் முடியவில்லை என்றால் மேலும் ஒன்றோ அல்லது இரண்டு நாட்களிலோ படத்தை முடித்துவிடுவோம்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் பாராட்டு பெற்ற, ஐந்து விருதுகளை வென்ற ஒரு நாடகத்தின் தழுவலே இந்த படம் என்று வரலட்சுமி மேலும் கூறியுள்ளார். ஒரே நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்து புதிய சாதனை செய்ய காத்திருக்கும் படக்குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment