இயக்குனர் சங்கத்தின் தலைவர் யார்? தேர்தல் முடிவு

  • IndiaGlitz, [Monday,July 22 2019]

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமனி பதிவான 1503 வாக்குகளில் 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். சுந்தர் சி, ஏகாம்பவானன், லிங்குசாமி, சித்ரா லட்சுமணன் ஆகியோர் இணை செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏற்கனவே பொதுச்செயலாளராக ஆர்வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இளம் நடிகை!

விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள

சூர்யாவுக்கு பதில் நான் பேசியிருந்தால்? காப்பான்' விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சூர்யா, ஆர்யா, சாயிஷா, மோகன்லால் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும்

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:  தல தோனி மிஸ்ஸிங் 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்கு சென்று அடுத்த மாதம் டி20, ஒருநாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

சூர்யாவின் 'காப்பான்' படத்தில் பாடகியாகிய பிரபல இசையமைப்பாளரின் மகள்

​​​​​​​சூர்யா நடிப்பில், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

சாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு பிறந்து நாள் என்றும் பாராமல் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பி கடந்த இரண்டு நாட்களாக நடந்த மீட்டிங் பிரச்சனைக்கு காரணம் சாக்சிதான்