பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி குடும்பத்தோடு பசியில் இருக்கும் அந்த தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகைகள் உதவ வேண்டுமென ஆர்கே செல்வமணி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து இலட்சக்கணக்கில் பணம், அரிசி மூட்டைகள் பெப்ஸி தொழிலாளர்களுக்கான குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவும் ஆர்கே செல்வமணியின் மனைவியுமான ரோஜா, 100 மூட்டைகள் அரிசியை பெப்சி தொழிலாளர்களுக்காக கொடுத்துள்ளார்.
இது குறித்து ரோஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: கொரோனா என்ற வைரசால் வேலையின்றி பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு நூறு மூட்டை அரிசியை நான் கொடுக்கப் போகிறேன். ஆனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. நீங்கள் செய்யவேண்டியது குடும்பத்தோடு வீட்டுக்குள்ளே இருந்து விலகி இருங்கள். ஏனெனில் 40 வருடமாக நீங்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். கெட்டதிலும் ஒரு நல்லது. கடவுள் நமக்கு கொடுத்த இந்த விடுமுறையை குடும்பத்தோடு செலவழியுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பதே சமுதாயத்திற்கு செய்கிற பெரிய உதவி. வீட்டிலேயே இருங்கள் என்று அவர் நடிகை ரோஜா குறிப்பிட்டுள்ளார்.
#கொரோனாவைவிரட்டுவோம் @RojaSelvamaniRK #CoronavirusLockdown pic.twitter.com/zWnP8kN0BW
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments