இந்தியாவில் மொத்தம் 5 திருடர்கள் இருக்கின்றார்கள்! ஆர்.கே.செல்வமணி
- IndiaGlitz, [Monday,July 10 2017]
சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இன்றைய முக்கிய பிரச்சனையான திரைத்துறையின் மீதான இரட்டை வரி பிரச்சனை குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
இன்றைக்கு விவசாயி மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரின் நிலைமையும் ஒன்றாக உள்ளது. ஒரு பொருளை உற்பத்தி செய்த விவசாயி அந்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். அதேபோல் தான் திரைப்பட தயாரிப்பாளரும். அவர் தயாரித்த படத்திற்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் உள்ளார். விவசாயிக்க்காவது ஒரு குறிப்பிட்ட விலை கிடைக்கின்றது. ஆனால் பல திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு எந்தவித முன்பணமும் இல்லாமல் வியாபாரம் ஆகின்றது. இந்த நிலை மாற வேண்டும்
ஒரு திரைப்படத்தை வெளிநாட்டில் யாரோ உள்ள ஒருவர் ஒரு ஜிபியில் இண்டர்நெட்டில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்துவிடுகிறார். அந்த படத்தை அனைவரும் டவுன்லோடு செய்து பார்த்துவிடுகின்றனர். இந்த திருட்டுத்தனத்திற்கு துணை நிற்பவர்கள் தொலைத்தொடர்பு துறையினர். பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், டாடா ஆகிய ஐந்து பேர்களும் ஐந்து திருடர்கள். இவர்களுடைய துணையுடன் தான் இந்த திருட்டு நடக்கின்றது. ஆனால் இவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. ஒரு திரைப்படத்தை 40 கோடி பேர் டவுன்லோடு செய்தால் 40 கோடி ஜிபிக்கான பணம் இந்த ஐந்து திருடர்களுக்கும் கிடைத்துவிடுகிறது. இதற்கு இந்திய அரசும் உடந்தை என்பதுதான் வருத்தமான விஷயம்' என்று பேசினார்.