'மாஸ்டர்' படப்பிடிப்பால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம்: ஆர்.கே.செல்வமணி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும் அரசியல் காரணங்களுக்காக அதை கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்கே செல்வமணி பேட்டியளித்துள்ளார்
விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென நேற்று மாலை பாஜகவினர் இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் செய்தனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய இயக்குனர் ஆர் கே செல்வமணி ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதை அரசியல் காரணங்களுக்காக தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம்
தமிழகத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது அரசியல்வாதிகள் படப்பிடிப்புக்கு இடையூறு செய்வதால்தான் படக்குழுவினர் பலர் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்படுகிறது. இனிமேலும் அந்த நிலைமையை உருவாக்க வேண்டாம் என்று ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments