'லியோ' டான்சர்கள் சம்பள பாக்கி விவகாரம்: பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடித்த டான்ஸர்கள் சிலர் தங்களுக்கு சம்பளம் வரவில்லை என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்று அவர்கள் கூறியுள்ள நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
’லியோ’ திரைப்படத்தில் உறுப்பினர்கள் அல்லாத 1400 பேரை கொண்டு சென்னை பனையூரில் உள்ள ‘ஆதி ஸ்ரீராம்’ ஸ்டுடியோஸில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750 வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.
தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.10,500 வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”
இவ்வாறு பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout