துணை முதல்வர் உதயநிதிக்கு  திரையுலகம் சார்பில் பாராட்டு விழா: ஆர்கே செல்வமணி

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

நடிகராக இருந்து துணை முதல்வர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தால் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ’குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், அதன்பின் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தார்.

நடிகரும் தயாரிப்பாளரும் ஆகி திரையுலகில் பிஸியாக இருந்த அவர், திடீரென அரசியலில் நுழைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன் சில மாதங்களில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். தற்போது, துணை முதல்வர் பதவியிலும் உள்ளார்.

இதனைக் கொண்டாட, திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பெப்சி தலைவர், இயக்குனர் ஆர். கே. செல்வமணி, நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். எனவே, சந்தர்ப்பம் கிடைத்தால், அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம், என்று தெரிவித்துள்ளார்.

 

More News

ரஜினியின் உடல்நிலை.. மருத்துவர்கள் கூறிய லேட்டஸ்ட் தகவல்.. 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட  DMY கிரியேஷன் நிறுவனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும்,  DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

ரஜினியின் உடல்நிலை: லதா ரஜினியிடம் போனில் பேசிய பிரதமர் மோடி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி விசாரித்ததாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

'கோட்' படத்தில் பட்டையை கிளப்பிய டான்ஸ் மாஸ்டர்.. 'தளபதி 69ல் இணைகிறாரா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சேகர் மாஸ்டர், தளபதி 69 படத்திலும் ஒரு பாடலுக்காக நடன இயக்குனராக பணியாற்ற

'பரிதாபங்கள்' லட்டு வீடியோ மீண்டும் பதிவேற்ற வேண்டும்: டிஜிட்டல் படைப்பாளிகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள்