close
Choose your channels

துணை முதல்வர் உதயநிதிக்கு  திரையுலகம் சார்பில் பாராட்டு விழா: ஆர்கே செல்வமணி

Wednesday, October 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகராக இருந்து துணை முதல்வர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்தால் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்த ’குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், அதன்பின் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தார்.

நடிகரும் தயாரிப்பாளரும் ஆகி திரையுலகில் பிஸியாக இருந்த அவர், திடீரென அரசியலில் நுழைந்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன் சில மாதங்களில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். தற்போது, துணை முதல்வர் பதவியிலும் உள்ளார்.

இதனைக் கொண்டாட, திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பெப்சி தலைவர், இயக்குனர் ஆர். கே. செல்வமணி, "நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். எனவே, சந்தர்ப்பம் கிடைத்தால், அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment