திரைத்துறையினருக்கும் தளர்வளிக்க வேண்டும்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Sunday,May 03 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது குறிப்பாக திரைத்துறை மற்றும் அதன் சார்ந்த அனைத்து துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு, ஒருசில துறைகளுக்கு ஒருசில தளர்வுகளை அளித்த நிலையில்
திரைத்துறையினருக்கும் தளர்வளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியபோது, ‘தொழில்துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல் திரைத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்றும், குறைந்தபட்சமாக படப்பிடிப்பு அல்லாத ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கேனும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.செல்வமணியின் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்காக காத்திருக்கும் திரைப்படங்கள் முழுமை பெறும் என்றும், கொரோனா நிலைமை சரியானவுடன் ரிலீஸ் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் பெப்சி அமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெப்சியின் இந்த வேண்டுகோளை அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'மாங்காய்' சாப்பிடும் சமீபத்தில் திருமணமான நடிகை: கர்ப்பமா? என ரசிகர்கள் கேள்வி

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக கணவருடன்

சன்னி லியோனிடம் 'தல' ரகசியத்தை கூறிய சிஎஸ்கே வீரர் 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் நடிகைகளைப் போலவே ஒரு சில கிரிக்கெட் வீரர்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ்: சென்னையில் பரபரப்பு

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா தாக்கம் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தையால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது 

கொரோனா சந்தையாக மாறிய கோயம்பேடு சந்தை: 146 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காய்கறிகள், பழங்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து சமூக இடைவெளியை

கொரோனா நச்சுயிரி மனித முயற்சியா? இயற்கை நிகழ்ச்சியா? வைரமுத்து 

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் ஒரு பக்கம் மிகவும் சீரியசாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.  குறிப்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த கொரோனா வைரஸை