துருவ் விக்ரம் - ரோஜா மகள் இணைந்து நடிப்பது உண்மைதானா? ஆர்கே செல்வமணி விளக்கம்!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷூகா மாலிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து இயக்குனர் ஆர் கே செல்வமணி விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படத்தின் நடிகராக அறிமுகமான விக்ரம் மகன் துருவ் விக்ரம், அதன்பின் ‘மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தில் நட்சத்திர தம்பதிகளான ஆர்கே செல்வமணி - ரோஜா தம்பதிகளின் மகள் அன்ஷூகா மாலிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த செய்தி குறித்து ஆர்கே செல்வமணி கூறியபோது, ‘எங்கள் மகள் அன்ஷூகா மாலிகா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்ப இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். அதனால் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் அவர் நடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறினார். ஒருவேளை எனது மகள் இந்தியா திரும்பியவுடன் சினிமாவில் நடிக்க விரும்பினால் அதன் பிறகு யாருடன் ஜோடியாக நடிப்பது என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ரோஜா மகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

மீண்டும் ஒரு சரித்திர திரைப்படத்தில் விக்ரம்? நாயகி யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' என்ற சரித்திர திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது

நீயும் உன் பொண்ணும் உயிரோட இருக்கணும்ன்னா, ஓடிப்போயிடுங்க: நாகார்ஜூனனின் 'இரட்சன்' டிரைலர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா நடித்த 'தி கோஸ்ட்' என்ற தெலுங்கு படம் தமிழில் என்ற 'இரட்சன்' பெயரில் வெளியாக உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக

'பிக்பாஸ் தமிழ் : கடந்த சீசனில் மிஸ்ஸான டிக்டாக் பிரபலம் இந்த சீசனில் உறுதியா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 6வது சீசன் தொடங்க உள்ளது என்பதும் இந்த சீசனுக்கான விளம்பர வீடியோக்கள்

நடிப்பது மட்டுமல்ல, முதல்முறையாக இதையும் செய்கிறார் யோகிபாபு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'மண்டேலா' திரைப்படம் தேசிய விருது

கார்த்தி-ராஜூ முருகன் இணையும் 'ஜப்பான்': படப்பிடிப்பு எங்கே? எப்போது?

கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான 'சர்தார்' திரைப்படம் தீபாவளி அன்று