மீண்டும் ஆர்.கே.நகர் பரபரப்பாகுவது எப்போது?

  • IndiaGlitz, [Monday,May 28 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தல் இந்திய அளவில் கவனத்தை பெற்றது. அந்த தேர்தலில் இரண்டு திராவிட கட்சிக வேட்பாளர்ககளை ஒரு சுயேட்சை வேட்பாளர் தோற்கடித்தார். அதுமுதல் ஆர்.கே.நகர் என்றால் மக்கள் மனதில் பதிந்துவிட்ட நிலையில் அதே பெயரில் தயாராகியுள்ள திரைப்படம் ஒன்றும் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் நையாண்டி படங்கள்  எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில்  பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு 'ஆர்.கே.நகர்' என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று  சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது சென்சாரில் 'U/A' சான்றிதழை பெற்று அடுத்த கட்டமான ரிலீஸை நெருங்கியிருக்கிறது.

திரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய படங்களை முயற்சிக்கும் போது அதற்கு தூணாக இருப்பது ரசிகர்கள் மட்டும் தான். இந்த நம்பிக்கையுடன், மொத்த குழுவும் இந்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறோம். இயக்குனர் சரவணராஜன் தனது சிறந்த முயற்சியால் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு சரியான அளவில் இருப்பதை  உறுதிப்படுத்தியுள்ளார். வைபவ் எமோஷன் மற்றும்  நகைச்சுவை கலந்த தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அவரது இயல்பான நடிப்பு அவரது பாத்திரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும். மறுபுறம், சம்பத்தின் கதாபாத்திரமும், திரை ஆளுமையும் படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா என ஒரு நட்சத்திர பட்டாளமே ஆர்.கே.நகர் படத்தில் நடித்திருக்கிறார்கள். 

கங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.

பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் வி.ராஜலட்சுமி உடன் இணைந்து ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.

More News

தோனி இந்தியாவின் பிரதமர் வேட்பாளரா? பிரபல இயக்குனரின் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பலம் வாய்ந்த ஐதராபாத் அணியை பிரித்து மேய்ந்து மிக எளிதில் சாம்பியன் பட்டம் பெற்றது.

தமிழகம் முழுவதும் வலம் வரும் 'கோலி சோடாவின்' ஜிஎஸ்டி வண்டி

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தின் புராமோஷனும் ரொம்ப முக்கியம். நல்ல படங்கள் கூட சிலசமயம் சரியான புரமோஷன் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளன

மூன்றாவது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்ற 'இரும்புத்திரை'

தற்போதைய திரைப்படங்கள் 2 வாரங்கள் வெற்றிகரமாக ஓடுவதே பெரிய விஷயம் என்ற நிலையில் 'இரும்புத்திரை' 3வது வாரத்திலும் சூப்பர் வசூலை பெற்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

'ஒரு குப்பைக் கதை' படத்தின் ஓப்பனிங் வசூல் நிலவரம்

நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமான 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

ஜிவி பிரகாஷின் 'செம' படத்தின் செமையான ஒப்பனிங் வசூல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' என்ற வெற்றி படத்தை அடுத்து அவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'செம' திரைப்படமும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில்