ஆர்.கே.நகரில் மட்டும் ஏப்ரல் 12ல் தேர்தல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' அறிவித்துள்ளது. ஆம், இந்நிறுவனம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான் ஏப்ரல் 12 என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 12ஆம் தேதி 'ஆர்.கே.நகர்' தேர்தலை அறிவித்துள்ளதாகவும், ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று வாக்களிக்க தயாராக இருக்குமாறும் இந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைபவ், சனா அல்தாப், இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
'ஆர்.கே.நகர்' திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம் இல்லை என்றாலும் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம் உள்ள இந்த திரைப்படம் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியாவது சரியான ரிலீஸ் நேரமாக கருதப்படுகிறது.
Very happy to announce our election date!!! Yes cast ur votes from this April 12th at a theatre near you!!! #rknagar from April 12th!!! @vp_offl @badri_kasturi @dir_saravanar @actor_vaibhav @Premgiamaren @Cinemainmygenes @Muzik247in @vasukibhaskar pic.twitter.com/EuOa8cw2hB
— Black Ticket Company (@blacktktcompany) March 31, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments