ஆர்.கே.நகரில் மட்டும் ஏப்ரல் 12ல் தேர்தல்!

  • IndiaGlitz, [Monday,April 01 2019]

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' அறிவித்துள்ளது. ஆம், இந்நிறுவனம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான் ஏப்ரல் 12 என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 12ஆம் தேதி 'ஆர்.கே.நகர்' தேர்தலை அறிவித்துள்ளதாகவும், ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று வாக்களிக்க தயாராக இருக்குமாறும் இந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைபவ், சனா அல்தாப், இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபுவின் உதவியாளர் சரவணராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

'ஆர்.கே.நகர்' திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம் இல்லை என்றாலும் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம் உள்ள இந்த திரைப்படம் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியாவது சரியான ரிலீஸ் நேரமாக கருதப்படுகிறது.

More News

ஆன்மீகப்பழமாக மாறிய அமிதாப்: அருகில் பிரபல தமிழ் நடிகர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் 'உயர்ந்த மனிதன் 'என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

விஜயகாந்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம்: நடிகர் ஆனந்த்ராஜ்

உடல்நலமின்றி இருக்கும் விஜயகாந்தை வைத்து அவரது குடும்பத்தினர் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாம் என நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அன்பு அரசியலுக்கு ஆபத்து: சசிகலா வாழ்க்கை வரலாறு திரைப்படம்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 

கோவையில் 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவன் கைது!

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அருகே உள்ள துடியலூர் என்ற பகுதியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

'அசுரன்' பாடல் குறித்து ஆச்சரிய தகவல் அளித்த ஜிவி பிரகாஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது