ஆர்.கே.நகர் ரிலீஸ் எப்போது? வெங்கட்பிரபு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம் 'ஆர்.கே.நகர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் கடந்த சில மாதங்களாக காத்திருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் வெங்கட்பிரபு, 'ஆர்கே.நகர்' திரைப்படம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,. மேலும் இந்த படம் ஏப்ரல் வெளியீடு என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.