ஆர்.கே.நகர் அரசியல் படமா? இயக்குனர் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கியுள்ள 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு 'ஆர்.கே.நகர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து இயக்குனர் சரவணராஜன் விளக்கியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மக்களிடம் டைட்டில் உடனே ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த டைட்டில் வைக்கப்பட்டதாகவும், மற்றபடி இந்த படத்தில் ஓரிரு அரசியல் நையாண்டிகள் காட்சிகள் இருக்குமே தவிர, இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை என்றும் சரவணராஜன் தெரிவித்தார்.
மேலும் ஒரு பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை எப்போதுமே குழந்தையாகவே தெரிவார்கள். ஆனால் அவர்கள் வெளியே எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியாது. எனவே இந்த படத்தை ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைபவ், சனா அல்தாப், இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments