ஆர்.கே.நகர் அரசியல் படமா? இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,March 30 2019]

வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கியுள்ள 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு 'ஆர்.கே.நகர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து இயக்குனர் சரவணராஜன் விளக்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மக்களிடம் டைட்டில் உடனே ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த டைட்டில் வைக்கப்பட்டதாகவும், மற்றபடி இந்த படத்தில் ஓரிரு அரசியல் நையாண்டிகள் காட்சிகள் இருக்குமே தவிர, இந்த படம் ஒரு அரசியல் படம் இல்லை என்றும் சரவணராஜன் தெரிவித்தார்.

மேலும் ஒரு பெற்றோருக்கு தங்களுடைய குழந்தை எப்போதுமே குழந்தையாகவே தெரிவார்கள். ஆனால் அவர்கள் வெளியே எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரியாது. எனவே இந்த படத்தை ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைபவ், சனா அல்தாப், இனிகோ , சம்பத்ராஜ், சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

More News

'ராக்கி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராக்கி என்ற நாய் முக்கிய வேடத்தில் நடித்த 'ராக்கி' என்ற திரைப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'தமிழ்ப்படம் 2' இயக்குனரின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்கிய 'தமிழ்ப்படம்' மற்றும் கடந்த ஆண்டு இயக்கிய 'தமிழ்ப்படம் 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

என் தந்தை எடுத்தது தாமதமான முடிவு: ரஜினி பட நாயகி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' பட நாயகிகளில் ஒருவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான சோனக்சி சின்ஹாவின் தந்தையும் நடிகருமான சத்ருஹன்சின்ஹா

வரலட்சுமி படப்பிடிப்பில் விபத்து: வேடிக்கை பார்த்த தாயும் மகளும் பலி!

வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தாயும் மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: வெற்றிமாறன் உள்பட 100 இயக்குனர்கள் கூட்டறிக்கை

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாடு முழுவதிலும் உள்ள 100 இயக்குனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.