வெங்கட்பிரபுவின் 'ஆர்.கே.நகர்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,May 26 2018]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி வந்த 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறித்து வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'ஆர்.கே.நகர்' திரைப்படத்தை நேற்று பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவிடம் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவலை வெங்கட்பிரபு தனது நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கம் மூலம் உறுதி செய்துள்ளார்.

வைபவ், சனா அல்தாஃப், சம்பத்ராஜ், அஞ்சனா க்ரிதி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

More News

சன்னிலியோனை 1000 முறை கதற வைத்த படம்

நடிகை சன்னிலியோன், தற்போது 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

'சாமி 2' டிரைலர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகபெரிய வரவேற்பை பெற்றது.

சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மீண்டும் ரிலீஸ் ஆவது ஏன்?

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் நடித்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுடையவர் என்பது பல நேரங்களில் தெரிய வந்துள்ளது. நடிகர், நடிகர் சங்க பொருளாளர் பணிகளுக்கு இடையே அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டப்படும்

ரூ.824 கோடி வங்கி மோசடி: பிரபல சென்னை நகைக்கடை அதிபர் கைது

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்வது என்பது கடந்த சில வருடங்களாக சர்வ சாதரணமாக நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது