ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர் திடீர் கைது: ஏன் தெரியுமா?
Friday, March 31, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, திமுக மற்றும் தீபா ஆகியோர்கள் தரப்பினர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தினகரன் அணியினர் மீது ஓபிஎஸ் அணி, திமுக உள்பட அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தேர்தல் கமிஷனும் இரவிலும் கூட பணியாளர்களை அமர்த்தி பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாக தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதிமுக அம்மா அணியை சேர்ந்த கருணாமூர்த்தி, தினகரனின் 'தொப்பி' சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடம் பணம் கொடுத்து கொண்டிருந்ததாகவும், இதுகுறித்து கிடைத்த தகவலின்படி போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணி ஆரம்பித்ததில் இருந்து பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments