ஆர் கே நகரும் ஆம்பூர் பிரியாணியும்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.கே நகர் இடைதேர்தலில் தினகரன் என்ற பெயரில் நான்கு பேரும், மதுசூதனன் பெயரில் மூன்று பேரும் மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள். இதை வழக்கமாய் செய்வது அவர்களுக்கு விழும் ஓட்டுகளை பிரிப்பதுக்கு இன்னொரு பக்கம் சுயச்சையாய் அதே பெயரில் உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய காரணம். அந்த பெயரில் உள்ள முக்கியமான வேட்பாளர் உதாரணத்துக்கு மதுசூதனன் வைத்து கொள்ளுங்கள் அவர் பெயரிலே இன்னும் 3 பேரு தாக்கல் செய்த வேட்புமனுவை பார்த்து எங்கே வோட்டு மாற்றி விழுமோ என்ற அச்சத்தில் அவர்களை அழைத்து அவர்களுக்கு லம்ப்பா ஒரு அமௌன்ட் செட்டில் செய்யப்படும். வெறும் பெயரை மட்டும் வைத்து பணம் சம்பாதிக்கலாம் நம் அரசியல் களத்தில்.
ஆர்.கே நகர் மக்கள் போல அதிர்ஷ்டசாலிகள் யாரும் இல்லை ஏனென்றால் ஜெயலலிதா கைதான பின்பு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த களம் ஆர்.கே நகர் அதுக்காக பதவியை ராஜினாமா செய்து கொடுத்தார் அப்போதையே ஆர்.கே நகர் எம்.ஏல்.ஏ வெற்றிவேல். அதன்பின் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவே நின்றார், ஜெயலலிதா இறந்தபின் மீண்டும் இடைதேர்தல் பணம் விநோயாகத்தால் தள்ளி வைக்கப்பட்டது. அப்போதும் வாக்காளர்கள் பலருக்கு பணம், பிரியாணி எல்லாம் கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆம்பூர் பிரியாணி நல்ல பேமஸ், அறுசுவையான பிரியாணி. ஆம்பூரில் பிரியாணி சமைப்போர் ஒரு சங்கம் வைத்து உள்ளனர். அதில் 234 பேர் உள்ளனர்.போன இடைதேர்தலில் ஆம்பூரில் இருந்து 66 பேரை பிரியாணி சமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த முறை ஆம்பூரில் இருந்து 132 பேர் ஆர்.கே நகர் தேர்தலுக்கு சமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.சாதாரண நாட்களில் தினமும் பிரியாணி சமைத்து கொடுப்பதுக்கு 500ல் இருந்து ஆயிரம் ரூபாய் வரை வாங்குவார்களாம். இந்த முறை டிமான்ட்டால் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 1500 ரூபாயில் இருந்து 3000 கொடுத்து புக் செய்து உள்ளனர்.அவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு அத்தனையும் ஏற்றும் கொள்கிறார்களாம்.
பிரியாணிக்கு சைடிஷ் கத்திரிக்காய் கொத்சு, ஆனியன் ரைத்தா செய்ய உதவியாளர்கள் மட்டும் 200 பேரை வேலூர், ஆம்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் ஆம்பூரில் சமைக்கும் பிரியாணி சாதா பாசுமதி அரிசியில் செய்யமாட்டார்கள். ஆரணியில் உற்பத்தியாகும் ஸ்பெசல் பாசுமதி அரிசியில் தான் செய்வார்களாம்.ஆரணி அரிசி விலை உயர்ந்தது. கத்திரிக்காய் கொத்சு செய்வதுக்கு கத்திரிக்காய் வேலூர் பக்கத்தில் இருக்கும் இளவம்பாடியில் இருந்து வரவைக்கபட்டு உள்ளது. அங்கே தான் முதல் தர கத்திரிக்காய் கிடைக்கும். கத்திரிக்காய் தட்டுப்பாடால் இப்போது இளவம்பாடி கத்திரிக்காய் ஒரு கிலோ 130 ரூபாயாம். ரைத்தா செய்வதுக்கு வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாய் கொள்முதல் செய்கிறார்களாம்.
இதில் இருந்து என்ன தெரியுது ஆம்பூர் பிரியாணி ஆர்.கே நகர் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கணும்ன்னு இருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது.
-சரத்பாபு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments