ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

நேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர், கொடி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கு வரும் 27ஆம் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம் என்றும் மனுதாக்கல் செய்ய கடைசி தினம் டிசம்பர் 4ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர்ம் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் டிசம்பர் 7ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.