மனைவியுடன் ஆர்ஜே விஜய்.. செம ரொமான்ஸ் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
எப்எம் வானொலிகள் மூலம் பிரபலமடைந்து அதன்பின்னர் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்கள் ஆர்ஜே பாலாஜி, ஆர்ஜே விக்னேஷ், என்பது தெரிந்ததே. அந்த வகையில் எப்எம் வானொலி தொகுப்பாளராக இருந்து அதன்பின் பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் வருபவர் ஆர்ஜே விஜய்.
விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கிய இவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்ஜே விஜய், மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு நவிலன் என்ற மகன் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்ஜே விஜய் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர்கே விஜய் தனது மனைவி மோனிகாவுடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் கேப்ஷனாக ’உங்கள் தோள்கள் எனக்கு பிடித்த இடம் என மோனிகா பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments