வைஃபுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட ஆர்ஜே விஜய்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வரும் ஆர்ஜே விஜய் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாகியுள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு ’வைஃப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆர்ஜே விஜய் ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கும் இந்த படத்தை ஹேமநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து அவர் கூறியபோது ’கணவன் மனைவி உறவை கொண்ட படம் என்பதால் இந்த படத்திற்கு ’வைஃப்’ என்ற டைட்டிலை நாங்கள் தேர்வு செய்தோம். செஸ் விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி ஒரு அசைக்க முடியாத சக்தி இருக்கிறதோ, அதேபோல் மனைவி என்பவர் ஒரு குடும்பத்தில் மிகவும் முக்கிய பங்கு வைக்கிறார். திருமணத்திற்கு பின்னர் மலரும் அன்பை எமோஷனலாக இந்த படத்தில் கொண்டு வந்துள்ளோம்.
இந்த படத்தின் தலைப்பை இதற்கு முன் எந்த படத்திலும் பயன்படுத்தவில்லை என்பது எனது அதிர்ஷ்டம். எல்லா வயதினரும் இந்த படத்தில் கனெக்ட் செய்யும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘ஜிப்ஸி’ ’டாடா’ ’கழுவேதி முருகன்’ போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவும், ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார். இந்த படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Wife @Olympiamovis
— RJ Vijay (@RJVijayOfficial) March 23, 2024
Need all ur love and support ❤️🙏@ianjalinair @shakthi_dop
Directed by Hemanathan
Music #jenmartin
Choreography - Dinesh master,Azar master,Radhika master . Lyrics - @VishnuEdavan1 bro, Ashique.
Edit - #preethi
Sincere thanks to Entire team ❤️🙏 pic.twitter.com/2SUwkD3z7W
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments