அப்பா ஆனார் ஆர்ஜே விஜய்: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 18 2020]

எப்எம் வானொலிகளில் இருந்து தமிழ் திரையுலகில் நுழைந்து தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்த நட்சட்த்திரங்களில் ஆர்ஜே பாலாஜி, ஆர்ஜே விக்னேஷ் உள்பட பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆர்ஜே விஜய்.

எப்.எம் வானொலி தொகுப்பாளராக இருந்து பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என தனது திறமையை நிரூபித்து வரும் ஆர்ஜே விஜய், சமீபத்தில் நடைபெற்ற தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆர்ஜே விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அதுதான் தான் அப்பாவாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்ஜே விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்’, ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி’ என்று தனது குழந்தை குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ஜே விஜய்க்கு அவரது நண்பர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்ஜே விஜய், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்பவர் தான் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.