ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமணம்: மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரல்

  • IndiaGlitz, [Saturday,May 14 2022]

நடிகர், ஆர்ஜே, பட்டிமன்ற பேச்சாளர், யூடியூபர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மணமகளுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

கார்த்தி நடித்த ’தேவ்’, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’, ரியோ நடித்த ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ்காந்த். இவர் நடத்திவரும் யூடியூப் சேனல் பிரபலம் ஆனது என்பதும் இவர் அவ்வப்போது பட்டிமன்றங்களில் சிறப்பாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்ஜே விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாகவும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்ஜே விக்னேஷ்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

30 வயது இளைஞனுடன் சரிகா காதலா? 

நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனின் தாயார் சரிகா, 30 வயது இளைஞரை காதலிப்பது போன்ற ஒரு திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பெண் நடன இயக்குனர் கோவாவில் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கோவாவில் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தமிழக முதல்வரிடம் முக்கிய கோரிக்கை வைத்த மோகனின் 'ஹரா' படக்குழுவினர்

கடந்த 80-90களில் 'பயணங்கள் முடிவதில்லை' 'இளமை காலங்கள்' 'மௌனராகம்' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மோகன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'ஹரா

அஜித் - ஆதி சந்திப்புக்கு காரணம் இதுதானா?

நடிகர் அஜித் தற்போது 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை நடிகர் ஆதி சந்தித்தார் என்ற தகவல் புகைப்படத்துடன் வெளியாகி இணையதளங்களில் வைரலானது

'குக் வித் கோமாளி' ரக்சன் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி. சனி ஞாயிறு எப்போது வரும் என்று பார்வையாளர்கள் காத்திருந்து