பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று சமூக வலைதளங்கள் மற்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரியங்கா மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் மிளா, சார்பாட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப், தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி, நடிகை பிரதைனி சர்வா, மாடல் மற்றும் நடிகர் கோபிநாத் ரவி, நடிகை சூசன் ஜார்ஜ் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த முறை போட்டியாளர்கள் அனைவரும் வித்தியாசமானவர்களாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது