ஆர்ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்': ரிலீஸ் தகவலுடன் கூடிய போஸ்டர் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

ஆர்கே பாலாஜி நடித்த ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வர்ணனையாளராக இருந்த ஆர்ஜே பாலாஜி ’சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை வெளியீடு என்ற தகவலுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்ற்அத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

More News

தனுஷின் 'D50' படத்தில் இணைந்த மேலும் இரு பிரபலங்கள்.. அனிருத்துக்கு பதில் இவரா?

தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷின் 50வது படமான 'D50'  திரைப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளர் என்று கூறப்பட்ட நிலையில்

ஹரி - விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க

சுவிஸ் வந்துவிட்டு இதை மிஸ் பண்ணலாமா? நடிகை தமன்னா பதிவிட்ட வேறலெவல் வீடியோ!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா சுவிஸ்சர்லாந்து சென்றுள்ள நிலையில்

கண்டிப்பா வருவான், நம்மகிட்ட மாட்டுவானாங்கிறது தான் முக்கியம்: 'போர் தொழில்' டீசர்..!

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடித்த 'போர் தொழில்' என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜியோ சினிமாவில் இலவசமாக வெளியாகும் பிரபல நடிகையின் த்ரில் படம்..!

ஜியோ சினிமாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை