நாற்பதே நாட்களில் அடுத்த படத்தை முடித்த ஆர்ஜே பாலாஜி: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோ மட்டும் இயக்குநராக மாறினார் என்பதும், அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்திலும் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வெற்றிகளை அடுத்து தற்போது அவர் புதிய படத்தை நடித்து இயக்கி வருகிறார். கடந்து 2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’பதாய் ஹோ’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அடுத்த படத்தை 40 நாட்களில் முடித்து விட்டதாகவும், கோவை மக்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், இந்த படத்தின் குழுவினர்களுடன் பணிபுரிந்தது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டு ஒரு மிகச்சிறந்த பேமிலி என்டர்டைன்மென்ட் படத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
It’s a WRAP for #TeamRJB3 !!! 40 days !!! Thank you God, my wonderful team and the people of Coimbatore for an amazing shooting experience..! We promise you, one of the biggest family entertainers of 2022 !!! ❤️ pic.twitter.com/bBUVtVSOSZ
— RJ Balaji (@RJ_Balaji) September 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments