நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம்.. மனைவியுடன் 20 வருடங்களுக்கு முந்தைய ஆர்ஜே பாலாஜி புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’20 வருடங்கள் நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று பெருமையாக சொல்லலாம்’ என்று நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது
நடிகர், இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது மனைவியுடன் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் அவர் ’2003 முதல் 2023 வரை, 20 ஆண்டுகள்...! நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று பெருமையாகச் சொல்லலாம், ஆனால் அதே வாலிபர்களாக நாங்கள் உணர்கிறோம்.
என் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, என்னை விட்டுக்கொடுக்காததற்கு நன்றி, எனக்கு இரண்டாவது/மூன்றாவது/76வது/473வது வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி...! சிறந்த நண்பனாகவும், காதலியாகவும், கண்டிப்பான மனைவியாகவும், சூப்பர் அம்மாவாகவும் இருப்பதற்கு நன்றி..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சு..!!! என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments