கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,February 12 2019]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், கமல்ஹாசன் நடித்து வரும் சேனாதிபதி கேரக்டரின் பேரனாக சித்தார்த் நடிக்கவிருப்பதாகவும், மற்றொரு முக்கிய கேரக்டரில் டெல்லி கணேஷ் நடிப்பதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஆர்ஜே பாலாஜி நடிப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் கமல் மற்றும் ஷங்கரின் படத்தில் ஆர்ஜே பாலாஜி முதல்முறையாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

ஓவியாவின் அதிகாலை அழைப்பு: ரசிகர்கள் குஷி

ஓவியா நடித்த '90ml' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்த டிரைலருக்கு ஒருசிலர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

'நாடோடிகள் 2' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கி வந்த 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும்

ஸ்டைலிஷ் இயக்குனருடன் இணைந்த விஷால்!

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கதலைவருமான விஷால் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

ரஜினி மகள் திருமண வரவேற்பில் முகேஷ் அம்பானி

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் நடந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று கலந்து கொண்டார்