அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக கட்சி பேதமின்றி ஒருசில அரசியல்வாதிகள் திரையுலகினர்களிடம் மோதுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுடைய விமர்சனங்கள் ரஜினி, கமல், விஜய் உள்பட பலரின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்த விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு பெரும் பிரச்சனை கொடுத்த அரசியல்வாதிகள் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவொரு இலவச விளம்பரமாக கருதப்பட்டாலும் ரிலீஸாகும் நேரத்தில் படக்குழுவினர்களுக்கு இது ஒருவித டென்ஷனாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் புரமோஷனுக்கு என பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் புரமோஷன் செய்ய வேண்டாம். ஆனால் இதையும் தாண்டி அரசியல்வாதிகள் தீர்க்க வேண்டிய பிரச்சனை நிறைய உள்ளது. பொதுமக்கள் தற்போது பேருந்துகள் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தயவுசெய்து அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். சினிமாவை எதிர்ப்பதற்கு பதிலாக உங்கள் கட்சி தலைவர்களிடம் கூறி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு உதவுங்கள்' என்று ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com