போராட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பிய ஆர்.ஜே.பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மானமுள்ள தமிழர்கள் இந்த போட்டியை பார்க்க செல்லக்கூடாது என்று அரசியல் கட்சியினர் கூறியபோதிலும் நேற்று ஸ்டேடியம் நிரம்பியது. இந்த நிலையில் இந்த போட்டியை வர்ணனை செய்ய கூடாது என்று ஆர்.ஜே பாலாஜிக்கு சிலர் வேண்டுகோள் விடுத்ததால் அவரும் இந்த போட்டியை வர்ணனை செய்ய போவதில்லை என்று அறிவித்தார். அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான இந்த போராட்டம் சரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்றவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:
ஐபிஎல் போட்டி இனி சென்னையில் இல்லை. இனிமேல் காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல்ல. காவிரி பிரச்சனையை கிரிக்கெட் பிரச்சனையாக்கி பின்னர் வன்முறை ஆக்கியது ஒன்றுதான் போராட்டக்காரர்களின் சாதனை. இந்த சுயநல போராட்டங்களை எந்த தன்மானம் உள்ள தமிழனும் ஏற்று கொள்ள மாட்டான். போட்டியை நிறுத்தியாகிவிட்டது இனிமேலாவது காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்று தாருங்கள் முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com