எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். ஆட்சியாளர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார். இதற்காக அவர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த கைது சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, 'கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன. ஏற்கெனவே இந்த அரசியலால் சோர்ந்து போய் இருக்கிறோம். எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். திருநெல்வேலியில் நடந்தது வெட்ககரமானது, சோகமயமானது. கார்ட்டூனிஸ்ட் செய்தது தவறென்று நிரூபிக்க வேண்டுமென்றால், அந்தப் பிரச்சினையின் மீது கவனம் செலுத்தி, மீண்டும் அப்படி ஒன்று நிகழாமல் இருக்க வழி செய்யுங்கள்' என்று கூறியுள்ளார்.

More News

'மெர்சலை அடுத்து விஸ்வரூபம் 2' படத்திற்கும் புரமோஷன் செய்யும் தமிழிசை-எச்.ராஜா

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்று அபார வசூலை குவித்ததற்கு தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த இலவச விளம்பரம் ஒரு முக்கிய காரணம்.

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது இந்திய திரையுலகமே அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து கூறியது.

தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி! பிரதமர் மோடியுடன் சந்திப்பா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கவுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரு திரைப்படம் தணிக்கை செய்ய 68 நாட்களா? சீனுராமசாமி கண்டனம்

ஒரு திரைப்படம் தணிக்கை செய்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை சமீபகாலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது தணிக்கை வாரியம் புதிய நிபந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளது.