ஆர்ஜே பாலாஜியின் அடுத்த இலக்கு தளபதி விஜய்யா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் 'எல்கேஜி' 'மூக்குத்தி அம்மன்' மற்றும் ' வீட்ல விசேஷம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்த ஆர்ஜேபாலாஜி அடுத்ததாக விஜய்க்கு கதை கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆர்ஜே பாலாஜி கூறிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் அவர்களுக்கு கதை சொல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று நான் கருதுகிறேன்.
அவருடன் கதை சொன்ன சில மணி நேரங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் கதை சொல்வதற்காக இரண்டு மாதங்கள் தயார் செய்தேன். 40 நிமிடங்கள் அவரிடம் ஒரு லைன் மட்டும் கதை சொன்னேன். அந்த கதையை கேட்டு அவர் தனக்கு ரொம்ப பிடித்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் 'மூக்குத்தி அம்மன்' போல உங்க ஸ்டைலில் ஒரு கதையை எதிர்பார்த்தேன். இது ரொம்ப பெருசா இருக்கு என்று கூறினார்.
இந்த படத்திற்காக எவ்வளவு காலம் உங்களுக்கு தேவைப்படும்? என்று கேட்டார். அதற்கு நான் ஒரு வருடம் ஆகும் என்று கூறினேன். என்ன ஒரு வருடமா? என்று விஜய் அவர்கள் கேட்டதற்கு வீட்ல விசேஷம்' என்ற படம் எடுத்து கொண்டிருக்கிறேன். அதை இயக்குவதற்கு 5 மாதம் ஆகியது. இந்தப் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.
'வீட்ல விசேஷம்' மாதிரி சின்ன படம் எடுக்கும்போது அவ்வளவு காலம் என்றால் உங்களைப் போன்ற பெரிய ஸ்டார் வைத்து எடுக்கும் போது எவ்வளவு பெரிய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதற்கு அவர் தாராளமாக கதையை டெவலப் செய்யுங்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து இது குறித்து பேசலாம் என்று கூறினார்.
தளபதி 67 இல்லை என்றால் தளபதி 77வது பண்ணுவேன் என்றும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கால அவகாசம் மட்டுமே வேண்டும் என்றும் அவரிடம் விட்டு வந்தேன் என்று விஜய்யிடம் கதை கூறிய அனுபவத்தை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்து கொண்டார்.
Here comes the much awaited video of @RJ_Balaji sharing his experience of how he narrated a story to @actorvijay for 40 mins and his excitement and patience about directing #Thalapathy’s 77 or 87 ?? in future ????pic.twitter.com/htRvnznoE0
— KARTHIK DP (@dp_karthik) June 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments