நயன்தாரா படத்தின் ரகசியத்தை கசியவிட்ட ஆர்ஜே பாலாஜி!

  • IndiaGlitz, [Monday,April 01 2019]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஐபிஎல் போட்டியில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வர்ணனை செய்வதை தவறாமல் பார்க்கலாம். அதுமட்டுமின்றி ஆர்ஜே பாலாஜியும் ஸ்ரீகாந்தும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், மேட்சை விட சிலசமயம் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது கார் ஓட்டுவது குறித்த பேச்சு வந்தது. அப்போது ஆர்ஜே பாலாஜி தனக்கு கார் ஓட்டவே தெரியாது என்று கூற, அதற்கு ஹேமங் பதானி, 'நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் காரில் உட்கார்ந்து வரும் காட்சியில் நீங்கள் காரை ஓட்டினிர்கள், நான் அந்த படம் பார்த்திருக்கின்றேன்' என்று கூறினார்.

அப்போதுதான் அந்த காட்சி படமாக்கப்பட்டதன் ரகசித்தை ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார். அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு கார் ஓட்ட தெரியாது என்று தெரிந்தது கடுப்பான படக்குழுவினர் பின்னர் வேறு வழியின்றி காரை கயிறு கட்டி இழுத்ததாகவும் நான் கார் ஓட்டுவது போல் உண்மையாகவே நடித்ததாகவும் கூறினார். இந்த ரகசியம் இப்போதுதான் முதல்முறையாக வெளியே வந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வர்ணனையின்போது ஆர்ஜே பாலாஜி என்னென்ன ரகசியங்களை வெளியிடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.