ஆர்.ஜே.பாலாஜியை திட்டியது ஏன்? இயக்குனர் கண்ணன்
Send us your feedback to audioarticles@vaarta.com
'ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் கண்ணன், பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியை கன்னாபின்னா என்று சில வருடங்களுக்கு முன் திட்டியதாகவும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
கண்ணன் இயக்கிய 'சேட்டை' திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ஆர்.ஜே.பாலாஜி அந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், அந்த விமர்சனத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தால் திட்டியதாகவும், ஆனால் அதன் பின்னர் அதை இருவருமே மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தான் எப்போதுமே தயாரிப்பாளருக்கு எந்தவகையிலும் நஷ்டம் ஏற்படாதவாறு படத்தை இயக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருவதாகவும், அதன் வெளிப்பாடே அன்று ஆர்.ஜே.பாலாஜியை திட்டியது என்றும் கூறினார்.
மேலும் கெளதம் கார்த்திக் குறித்து இயக்குனர் கண்ணன் கூறியபோது, 'தற்போது தெலுங்கில் பிரின்ஸ் என்ற பட்டத்துடன் மகேஷ்பாபு எப்படி உச்சத்தில் இருக்கின்றாரோ அதே உச்சத்தை தமிழில் நிச்சயம் கெளதம் கார்த்திக் இன்னும் இரண்டு வருடங்களில் வருவார் என்றும், அவரது உழைப்பு நிச்சயம் அவரை முன்னேற்றிவிடும் என்றும் கூறினார்
கெளதம் கார்த்திக், ஷாரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி, சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மயில்சாமி, மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com