நான் அப்படி பேசியிருக்க கூடாது: ரஜினி குறித்து ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி தீபாவளி விருந்தாக ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை கடந்த சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ புரோமோஷனின் ஒரு பகுதியாக இன்று டுவிட்டரில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ரஜினிகாந்த் குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆர்ஜே பாலாஜி பதிலளித்த போது ’நான் சூப்பர் ஸ்டாரின் ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் தாத்தா ’ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று கூறினார். அது என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து உள்ளது. ரஜினிகாந்த் ஒரு அற்புதமான மனித நேயம் உள்ளவர். ஒரு சூப்பர்மேன்.

‘தளபதி’ முதல் ’தர்பார்’ வரை அவரை பத்தி நிறைய நினைவுகள் எனக்கு உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி ஒன்று கொடுத்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. நான் அப்படி பேசியிருக்க கூடாது என்று தோன்றும். அதற்காக நான் மிகுந்த வருத்தப்பட்டேன். நான் அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அவருக்கு அனைத்து சந்தோசங்களும் அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்,

More News

மும்பையைப் பழிதீர்த்து முதல் கோப்பையை வெல்லுமா டெல்லி?

ஐபில் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அனுபவ வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை இளம் படையான டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொள்கிறது. 

பழைய செருப்புக்கு நிகரானவர் ஜோ பிடன்… இப்படி வாழ்த்தி இருக்கும் ஒரு பிரபல பத்திரிக்கை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறது

கருப்பா இருக்கிறவங்க கட்டிப்புடிக்க கூடாதா? வேல்முருகன் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய வேல்முருகன் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவரது பேட்டிகள் குறித்து ஏற்கனவே பார்த்தோம்

அட ஜேம்ஸ் கேமரூன் நீங்களா? இயக்குனரை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

தீபாவளி கொண்டாட்டம்… பசுமை பட்டாசு தேர்வு? அஜீரணக் கோளாறு?? சில எளிமையான வழிமுறை!

தீபாவளி என்றாலே கலர் கலரான இனிப்பு வகைகள், பொறிபொறியான பட்டாசுகள், புத்தாடை இதுதான் நினைவுக்கு வரும்