'மன்னன்' 'படையப்பா' படங்களில் தவறான கருத்துகள்: ஆர்ஜே பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அவர் நடித்த ’மன்னன்’ ‘படையப்பா’ படங்களில் தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இந்த கல்லூரி குறித்து பாலாஜி பேசியபோது, ‘இந்த கல்லூரிக்கு எப்போது வந்தாலும் நான் ஆச்சரியமாக பார்ப்பேன் என்றும் ஒரு டெஸ்க்கில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பையன் உட்கார்ந்து இருப்பார்கள் என்றும் இந்த சமநிலையை நான் வேற எந்த கல்லூரியிலும் பார்த்ததில்லை என்றும் கூறினார் .
சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேச கூடாது என்று பொத்தி பொத்தி வளர்ப்பதால் தான் அவர்கள் வளர்ந்தவுடன் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை என்றும் கூறினார். நமது சினிமாவும் பெண்கள் குறித்து தவறான புரிதலையே காட்டிக் கொண்டிருக்கின்றனர் என்றும் ’மன்னன்’ படத்தில் நன்றாக படித்து வேலை பார்த்து கம்பெனியை நிர்வாகம் செய்யும் விஜயசாந்தி கெட்டவள் என்றும் வீட்டில் அம்மாவுக்கு காபி போட்டுக்கொடுக்கும் குஷ்பு நல்லவர் என்றும் காட்டுவார்கள். அதேபோல் படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்ட ரம்யாகிருஷ்ணன் கெட்டவள், பாமர பெண் செளந்தர்யா நல்லவள் என்று காட்டி இருப்பார்கள் என்றும் கூறினார்.
நமது சமுதாயத்தில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையாவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த கல்லூரி அதை ஆரம்பித்து வைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் பேசினார். அவருடைய பேச்சுக்கு கல்லூரி மாணவர், மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments