நெல்சன் குறித்து ஆர்ஜே பாலாஜி சொன்னது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். ஆனால் அவர் இயக்கிய ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நெடிசன்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். குறிப்பாக லோகெஷ் கனகராஜின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் குறித்த மீம்ஸ் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் குறித்த மீம்ஸ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தள கூறியிருப்பதாவது: நெல்சன் ஒரு அருமையான இயக்குனர். நான் அவருடன் பல நிகழ்ச்சியில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களின் தீவிர ரசிகன் நான்.
அவர் ஒரு ஆச்சரியமான திறமையை கொண்டவர். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற மீம்ஸ்களை நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் குறித்து ஆர் ஜே பாலாஜி பதிவு செய்துள்ள இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
Neslon is an extraordinary director..! I’ve worked with him in many shows and been a huge fan of his films..! He s one amazing talent with such an inspiring journey..! Am sure he’s gonna give us somuch happiness with his films in the future !!!❤️
— RJ Balaji (@RJ_Balaji) June 13, 2022
Lets stop this plz.?????? https://t.co/tangkWGmDi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com