சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி.. 'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் அவர் சிறை கைதியாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே. பாலாஜி, அதன் பின்னர் ஹீரோ, இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அடுத்ததாக, அவர் சூர்யா நடித்திருக்கும் 45வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி நடிக்கும் "சொர்க்கவாசல்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஆர்ஜே பாலாஜி சிறைக்கைதியாக இருப்பது போலவும், மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் என்ற பலகையுடன் நின்றிருப்பது போலவும் உள்ள காட்சி, ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செல்வா, படத்தொகுப்பு பணியை செல்வா செய்து வரும் நிலையில்
இந்த படத்தை ஸ்வைப் ரைட்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னர் ஆர்ஜே. பாலாஜி, சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
“So proud to see @Sid_Vishwanath, my former AD, step into the director’s role! Congratulations da 🌹❤️😊Excited to share the first look of his debut film #Sorgavasal. Wishing you all the best on this amazing journey ahead—wish it leads to a massive success! 🎉🎥 thanks your… pic.twitter.com/RsxipqPwUm
— pa.ranjith (@beemji) October 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments