அடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டம்!

ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது. இதனை அடுத்து ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தின் தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஆயுஷ்மான் குரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆயுஷ்மான் குரானா வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், அஜித்தின் ‘வலிமை’ தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்ததும் கோவையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார் என்றும், அதற்கேற்ற ஏற்பாடுகளுடன் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக கே பாக்யராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தனக்கு வந்தாதான் தலைவலி தெரியும்: திமுக ஆட்சியை விமர்சனம் செய்த தமிழ் நடிகை!

சென்னையில் இன்றுமுதல் இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதை விமர்சனம் செய்து தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்: சென்னைக்கு மழை என வெதர்மேன் தகவல்

சமீபத்தில் அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி கேரளா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் புரட்டி எடுத்தது என்பது தெரிந்ததே.

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை: கி.ரா. மறைவு குறித்து நடிகை பிரியா பவானிசங்கர்!

சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் மறைவு குறித்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்களும், முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும்

ஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா? என்ன செய்யும் தமிழக அரசு?

தமிழகத்தில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக 30 ஆயிரத்தைத் தாண்டுகிறது.