ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் நாயகியாகும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்.கே.ஜி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் என்பதும் அந்த படத்தின் வெற்றியை அடுத்து ’மூக்குத்தி அம்மன்’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார் என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் தற்போது ’வீட்ல விசேஷங்க’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ஆர்ஜேபாலாஜியின் இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவா ஒளிப்பதிவில் மதன் கணேஷ் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
We are Happy To Commence Our Next, A Thrilling Dark Comedy #PrincePictures7
— Prince Pictures (@Prince_Pictures) March 4, 2022
Feat @RJ_Balaji & @aishu_dil
Dir @jiyenkrishna #RJBalajiNextOuting@Prince_Pictures @lakku76 @dopyuva @ganesh_madan @veeramani_art @venkatavmedia @kirubakaran_AKR @DuraiKv @sarathnivash pic.twitter.com/UzUKrgK5zh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments