படப்பிடிப்பு முடிந்ததும் கெட்டப் மாறிய ஆர்ஜே பாலாஜி: புகைப்படம் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்ஜே பாலாஜி தான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புதிய கெட்டப் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தாடியுடன் இருந்த ஆர்ஜே பாலாஜியும் தற்போது தாடியை எடுத்துவிட்டு கிளீன் ஷேவ் தோற்றத்தில் உள்ளார்.
இந்த புதிய கெட்டப்பின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அஜித் பாணியில் ஆர்ஜே பாலாஜியும் படப்பிடிப்பு முடிந்ததும் தனது கெட்டப்பை மாற்றி உள்ளாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ’சிங்கப்பூர் சலூன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் ஆர்ஜே பாலாஜி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்ஜே பாலாஜி ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்து வரும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தநிலையில் ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஜியன் கிருஷ்ண குமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் மதன் படத்தொகுப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
And its a wrap for #SingaporeSaloon ! ❤️
— RJ Balaji (@RJ_Balaji) December 18, 2022
In theatres, Summer 2023 !?? pic.twitter.com/QC8aS6oYoI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com