close
Choose your channels

சிறைக்குள் சில திகில் சம்பவங்கள்.. ஆர்ஜே பாலாஜியின் 'சொர்க்கவாசல்' டீசர்..!

Monday, October 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர். ஜே. பாலாஜி நடித்த "சொர்க்கவாசல்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேல் இருக்கும் இந்த டீசரில் சிறையில் சில குற்ற சம்பவங்கள் நடப்பதும், ரத்தக்களரியான அந்த சிறைச்சாலையில் ஆர். ஜே. பாலாஜி இருப்பதுமான காட்சிகள் உள்ளன. குறிப்பாக, செல்வராகவன் கத்தியை எடுத்து ஆட்டை வெட்டுவது போல் வெட்டும் திரில் காட்சியும் இந்த டீசரில் உள்ளதைப் பார்க்கும்போது, இந்த படம் முழுக்க முழுக்க ஒரு திரில் கதை அம்சம் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் பாலாஜி சக்திவேல், அந்தோணி தாசன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சித்தார்த் விசுவநாத் என்பவர் இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசையில், பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன் நடிப்புக்கும் தீனி போடும் வகையில் கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment